Sunday, November 15, 2009

"குடிப் பழக்கம்" ஒரு நோயா அல்லது மனபலவீனமா? --


Más opciones 19 mar, 10:24
"குடிப் பழக்கம்" ஒரு நோயா அல்லது மனபலவீனமா?
--------------------------------------------------------------------------- -----
மனிதன் இந்த மண்ணில் தோன்றிய காலத்தி லிருந்தே மது அருந்தும் பழக்கமும்
இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஈரான் நாட்டின் மேற்கிலுள்ள கோடின்
தேபே என்ற சுமேரிய ஊரில் 6000 ஆண்டுகளுக்கு முன்பே அங்கு வாழ்ந்த மக்கள்
ஒயினும், பீரும் அருந்தியிருக் கிறார்கள் என்பது, அங்கிருந்து
அகழ்வாராய்ச்சி செய்து எடுக்கப்பட்ட மட் பாண்டங்கள் மூலம்
தெரியவந்துள்ளது.

மெசபடோமியா நாட்டு மக்கள் தானியங்களைப் புளிக்கவைத்து அவற்றிலிருந்து மது
தயாரித்து அருந்தியுள்ளனர். பல நூற்றாண்டுகளாக, மதுவை மக்கள்
இறைவழிபாட்டிலும், மருந்தாகவும் பயன் படுத்தி வந்தாலும், பொழுது
போக்கிற்காகவும் பயன்படுத்தினர் என்று வரலாறு கூறுகிறது.

முதன் முதலில் மனிதனால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் "ஹமுராபி" என்னும்
சட்டத் தொகுப்பில் உள்ள மதுவைப் பற்றிய குறிப்பு களில், அதை எவ்வாறு
அருந்தவேண்டும், எப்படி விற்பனை செய்யவேண்டும் என்பதற்கான வரை முறைகள்
இருந்திருக்கின்றன. கி.பி. 2000 ஆண்டுகளுக்கு முன்பு, பாபிலோனிய
மக்களிடம் இருந்த மதுப் பழக்கத்தால், சமுதாயத்தில் நிலவிய
பிரச்சினைகளுக்கும் இந்நூல் ஆதாரமாக இருக்கிறது.

மாவீரன் அலெக்ஸாண்டர், கி.மு.330 ஆம் ஆண்டு பெர்சபோலிஸ் நகரில் இருந்த
அரச மாளிகை தீக்கிரையான போது அவன் மதுபோதையில் இருந்ததாக புளுத்தார்க்
என்ற வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். அவன் மதுநோய்க்கு அடிமை
யாகித்தான் இறந்ததாக சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பல நூற்றாண்டுகளாக நமது இந்திய நாட்டில் இருந்துவரும் மதுப்பழக்கத்தால்
ஏற்பட்ட தீய விளைவுகளை இதிகாசங்களும், யோகிகளும் கண்டித்து வந்ததாக
வரலாறு கூறுகிறது.

மது அருந்தும் பழக்கமுள்ளவர்களைப் பற்றி எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில்,
முதியோர்களைவிட இளைஞர்களும், பெண்களைவிட ஆண்களும், தொழிலாளிகளைவிட
அலுவலகத்தில் பணி யாற்றுவோரும்தான் அதிகம் எனத் தெரிகிறது.

அமெரிக்க மக்களில் 33 சதவீதமும், இத்தாலியில் 36 சதவீதமும், பிரான்ஸில்
38 சதவீதமும் மதுப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்கிறது ஓர்
ஆய்வு.

மூன்றாண்டுகளுக்கு முன்பு, இந்தியா முழுவதும் எடுக்கப்பட்ட ஓர்
ஆய்வின்படி, குறிப்பிட்ட சில சமுதாயங்களில் ஆண்களில் 50 சதவீதமும்,
பெண்களில் 20 சதவீதமும் மது அருந்துவதாக தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் குடிப்பழக்கம் உள்ள 400 பேர் களிடம் "நீங்கள் எதற்காகக்
குடிக்கிறீர்கள்?" என்று கேட்டபோது அவர்களிடமிருந்து தெரியவந்தது:

# 32.75 % பேர் - போதைக்காக

# 24.00 % பேர் - தொழில் களைப்பைப் போக்கிக்கொள்ள.

# 22.25 % பேர் - கவலைகளை மறக்க.

# 05.00 % பேர் - இரவில் நன்றாகத் தூங்க.

# 04.50 % பேர் - உடல் உபாதைகளை மறக்க.

# 03.75 % பேர் - உடல் சூட்டைத் தணித்துக்கொள்ள.

# 03.75 % பேர் - காதல் தோல்வியை மறக்க.

# 02.75 % பேர் - பிள்ளைகளால் ஏற்படும் கவலைகளை மறக்க.

# 01.25 % பேர் - மனைவி தரும் தொல்லையை மறக்க.

# 01.00 % பேர் - உடல் உறவுகொள்ள.

மது அருந்தும் அத்தனை பேருமே குடி நோயாளிகள் அல்ல என்பது அமெரிக்காவில்
எடுக் கப்பட்ட ஓர் ஆய்வு மூலம் தெரியவந்தது. அங்கே 10 கோடி பேர்
மதுவருந்தினாலும், ஒரு கோடி பேர் மட்டுமே மது சம்பந்தமான நோய்களினால்
பாதிக் கப்பட்டுள்ளனர். அதுபோலவே, பிரான்ஸ் நாட்டில் மது அருந்தும்
கோடிக்கணக் கானவர்களில் 15 சதவீதம் மட்டுமே மது சம்பந்தமான நோய் களினால்
பாதிக்கப்பட்டுள்ளனர்.

குடிப்பழக்கத்துக்கு அடிமையாவது ஒரு நோயா அல்லது மனபலவீனமா?

தொடக்கத்தில் இது "மனபலவீனம்" என்று கருதப் பட்டு வந்தது. 1956ல் தான்
'தீவிர மதுப்பழக்கம் ஒரு நோய்' என்பதை ஏற்றுக் கொண்டது "அமெரிக்க
மருத்துவ சங்கம்".

ஜோக்:

"குடிப்பழக்கத்தை விட்டுடச்சொன்னார் டாக்டர்னு
சொன்னீரே......விட்டுட்டீரா?"

"ம்....ம்...ம்...விட்டுட்டேன்............அந்த டாக்டர்கிட்ட போறத!"

(மற்றவை 'அடுத்த ரவுண்டில்')

- கிரிஜா மணாளன்


No comments:

Post a Comment