மது ஓர் உணவு அல்ல. போதைப் பொருள். பதார்த்தங்கள் கெடுவதிலிருந்து தயாரிக்கும் பொருள். மிகக் கொடிய விஷம். மதுவினால் குடிகள் பல கெட்டன என்பதை நாம் அறிவோம். அகால மரணம், கொலை, திருடு, விபச்சாரம் எல்லாம் மதுவினாலேயே உண்டாகின்றன. ஞாபகசக்தியும் சிந்தனை ஆற்றலும் சிதைந்து போகும். புத்தி, நிதானம் குலைந்து மன ஒழுங்கையும் அடக்கத்தையும் சீரழித்து விடுவது மதுபானம்.
பெருங்குடியர்களும் யோகாசனப் பழக்கத்தினால் கொடுமை நிறைந்த இப்பழக்கத்தை விட்டொழித்திருப்பது அனுபவ உண்மையாகும்.
மதுவால் இரைப்பை, கல்லீரல், இரத்தக் குழாய்கள், சிறுநீரகம், நரம்பு மண்டலம் இவற்றிற்குப் பெரும் கேடு உண்டாகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். பஞ்சமாதபாதங்களில் மது குடிப்பதும் ஒன்று. மதுவால் வரும் கேடு பற்றி நமது தமிழ் நூல்கள் பலவும் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளதுடன் அப்பழக்கத்தைக் கைவிடுவதே மேலானது என்பதையும் சிறப்பாக வலியுறுத்தியுள்ளன.
டீ சாரீர வலிவைக் குறைக்கின்றது. டீ, குடி இரத்தத்தைக் கெடுத்து நரம்புகளைத் தளரச் செய்து சாரீரத்தின் ஆரோக்கியத்தையும் வலிவையும் நாளுக்கு நாள் குறைத்து விடுகிறது. குடிப்பழக்கம் உடையவன் திடீர் மரணம் அடைவான். மதுபானப் பேய் ஒருவனைப் பிடித்துக் கொண்டால் அது அவனது இளமை இன்பத்தினையும் கெடுக்கும். அன்பாகிய அழகிய பூச்செண்டுக்கு வேர்ப்புழு. அறமாகிய பூஞ்சோலையை அழிக்கும் வனவிலங்கு. அறிவாகிய பூஞ்சோலையை அழிக்கும் பேய்க்காற்று. அமைதியான குடும்பத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தும். வறுமை, பிணியை உண்டுபண்ணும்.
இந்த கொடுமையை உணர்ந்து மனுதர்மசாஸ்திரத்தில், மருந்துக்காவது மதுபானம் அருந்தியவன் அப்பாபத்தைப் போக்க கந்தை வஸ்திரத்தைத் தரித்து, சடை முடியுடன் ஓராண்டு நெய்யை அல்லது பிண்ணாக்கை சாப்பிட்டு இருக்க வேண்டும் என, கடுந்தண்டனையைக் கூறியுள்ளது. மதுவைக் கண்டிப்பாக விலக்க வேண்டும் என பைபிளிலும் கூறப்பட்டுள்ளது
Sunday, November 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment