Sunday, November 15, 2009

குடிப்பழக்கம் மரணத்தின் நிச்சயம்

குடி, குடியைக் கெடுக்கும் என்று சொன்னாலும் நம்மவர்கள் குடிப்பழக்கத்தை விடுவதாக இல்லை. அவர்களின் கவனத்திற்காககுடிப்பழகத்தால் ஏற்படும் தீமைகளில் சில. ஒன்றா, இரண்டா ? நூற்றுக்கும் அதிகமான தீமைகளை கூறலாம். இருந்தபோதிலும் முக்கியமான சில தீமைகளை மட்டும் இங்கே குறிப்பிடுகிறோம்.

குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு இரைப்பையில் புண் ஏற்படும். கணையம் பழுதுபடும். இவற்றால் இவர்கள் வாழ்நாள் முழுவதும் வயிற்றுவலித் தொல்லையல் அவதிப்படுவர். வருடக்கணக்கில் மது அருந்தினால் கல்லீரல் கெட்டுப்போகும். கரணை நோய் வந்து விடும். இது உயிருக்கே ஆபத்து தரக்கூடிய கொடிய நோய்.

மதுவில் உள்ள நச்சுப்பொருட்கள் முளை நரம்பணுக்களைச் சிதைத்து விடும். விளைவு? நரம்புகள் வலுவிலந்து நரம்புத் தளர்ச்சி, விரல் நடுக்கம், நடையில் தள்ளாட்டம், பேச்சு உளறுதல் போன்ற கோளாறுகள் வரக்கூடும். எப்பொழுதும் குடிபோதையில் உள்ளவருக்கு மனநலம் வெகுவாக கெட்டுப் போகும். இவர்களால் எந்த வேலையும் செய்ய முடியாது.

குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு ரத்தக் கொதிப்பு, மாரடைப்பு, நீரிழிவு போன்ற நோய்கள் வருவது சகஜம். இவர்கள் உணவை மறந்து உறவுகளை மறந்து எந்த நேரமும் குடிப்பதே வேலை என்று இருந்தால், சத்துள்ள உணவுகள் கிடைப்பது கடினம். ஆகையால் இவர்களுக்கு வைட்டமின் மற்றும் தாதுக்கள் பற்றாக்குறை ஏற்பட்டு கோர்சகாப் மனநோய் வந்து விடும்.

இது ஒரு திடீர் மனக்குழப்ப நோய். இதில் மனநோய் மட்டுமின்றி, ஆரோக்கியக் குறைவும் ஏற்படுவது உண்டு. முக்கியமாக கைகால்கள் செயலற்றுப் போகும். கண்பார்வை குறைந்து விடும். தற்கொலை எண்ணம் தலைதூக்கும். ஆக மொத்தத்தில், குடிப்பழக்கம் மனித உயிரைச் சிறுகச் சிறுகக் குடித்து விடும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
(மூலம் - வெப்துனியா)

No comments:

Post a Comment