Sunday, November 15, 2009

மதுவை மறக்க முடியுமா

மதுவை மறக்க முடியுமா?


குடியால் உடலும் உள்ளமும் கெட்டு, சமுதாயத்தில் ஒழுக்கத்தையும், மானத்தையும் இழந்து, திருடு, பொய், கொள்ளை, கற்பழிப்பு போன்ற கெட்ட சகவாசங்களில் ஈடுபட்டு குடும்பம் சீர்கெட்டு, தொழில் பாதித்து, உற்றார் உறவினரை இழந்து உயிரைவிட காரணமான மது அடிமைகள் பலர்.
ஊதியத்தில் குடும்பம் நடுத்துபவர்கள், அவன் சம்பாத்தியம் அவனுக்கு மட்டும் போதமாட் டேன் என்கிறது என பேசுவதைக் கேட்டிருக்கிறேhம்.
மது அருந்துபவர்களை ஏமாற்று கின்றனர். தன்னுடன் இருப்பவனே இவனை குடிகாரன் என்று பிறரிடம் சொல்லி அசிங்கப்படுத்துகிறான். தானும் அதிகமாக குடித்து தன்னையும் அறியாமல், கண்ட இடத்தில் வாந்தி எடுத்து தகராறு செய்து, அடி, உதை வாங்கி வந்து (அ) அடித்து விட்டு வந்து பிரச்சினைகள் ஏற்பட்டு கால் மூட்டுகள்; தளர்ந்து நடந்து, விழுந்து, தள்ளாடிய படி எந்த இடம் என பார்க்காமல் படுத்து வீடு வந்து சேரமுடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
சொந்தமும், சுற்றமும் ஏளனமாகப் பார்ப்பது, மது அருந்த பணம் போதாததால் கெஞ்சியோ, மிரட்டியோ பணம் பறித்து செல்வது திருட்டுத்தனம், பொய் பேசு தல், கெட்டவார்த்தை, மனம் புண்படும் படி பேசுவது, முரட்டுத்தனத்துடன் தன்னால் அன்பு செலுத்துபவர்களை அடிப்பது, சூடு வைப்பது, துன்புறுத்து வது, தீரா பகையை வளர்த்துக் கொள்வது, குடித்து விட்டு மறுநாள் சரியான நேரத்திற்கு ஒழுக்கக் கேடான செயல் களை செய்தல், சொந்த பெண்ணை கற்பழித்தவர்களும் உண்டு.

இப்படிப்பட்ட இழி நிலைகளை உண்டாக்குபவை இந்த மதுபானங்கள்,
உடலிலுள்ள ராஜ உறுப்புகளான, மூளை, சிறுநீரகம், கல்லீரல், கணையம், இருதயம், நுரையீரல், இரைப்பை, ரத்த நாளங்கள், எலும்பு மஜாஜ் முதற் கொண்டு விட்டு வைக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக பலமிழக்க செய்து பலவித நோய்களுக்கும் ஆளாக்கிவிடுகிறது.

இது ஸ்லோ பாய்சன் மட்டுமல்ல, சீக்கிரத்தில் மனிதனை பிடித்துக் கொள் ளும் பானம். எத்தனை சிரமப் பட்டாலும் விடுபட நினைத்தாலும் முடிவ தில்லை. உடலில் ரத்தம் எங்கெல்லாம் செல்கிறதோ அத்தனை இடத்திற்கும் சென்று சிறு மூளையை தாக்கி மனிதனை தள்ளாட வைக்கிறது

No comments:

Post a Comment