Sunday, November 15, 2009

குடிப் பழக்கம்" ஒரு நோயா அல்லது மனபலவீனமா?

குடிப்பழக்கத்தினால் வரும் தீமைகளைப் பற்றி திருவள்ளுவர் கூறுவதையும்
இங்கே நினைவுகூர்வோம்.

"ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றார் முகத்துக் களி."

"நாணெனும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு."

(குடிப்பழக்கம் உள்ளவனை பெற்ற தாயும் விரும்பமாட்டாள். சான்றோர் அவனை
வெறுப்பர். நாணம் அவனைவிட்டு நீங்கும். எனவே குடிப்பழக்கம் என்பது
பெருங்குற்றத்துக்குச் சமமானது.)

"துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண்பவர்."

(மது அருந்துவதற்கும், நஞ்சு உண்பதற்கும் எந்த வேறுபாடும் இல்லை.
இருவருமே அறிவிழப்பதால், இருவருமே இறந்தவர்கள்தான்.)

"களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று."

"கள்ளுண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு."

(கள்ளுண்டு மயங்கியவனைத் திருத்துவது நீரில் மூழ்கியவனைத் தீப்பந்தம்
பிடித்துக்கொண்டு, நீரில் மூழ்கித் தேடுவது போன்றது. திருத்த
முயல்பவனிடம் உள்ள அறிவும் அழியும்.
ஒருவன் கள்ளுண்ணாதபோது, அதை உண்டவன் போடும் ஆட்டத்தைக் கண்டாவது
திருந்தவேண்டாமா?)

No comments:

Post a Comment